ஆபாச படத்தை நீக்க கோரி போலீசில் அனுயா புகார்

Bookmark and Share

ஆபாச படத்தை நீக்க கோரி போலீசில் அனுயா புகார்

கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுசித்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை வி‌ஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்று இதுகுறித்து விளக்கம் அளித்தார். சைபர் க்ரைம் போலீசில் பரபரப்பு புகாரையும் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

‘சிவா மனசுல சக்தி’, ‘நண்பன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படமும் பரவியது. இந்நிலையில் டிவிட்டரில் இருந்து ஆபாச படத்தை நீக்குமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து நடிகை அனுயா, பாந்திராவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே அந்த ஆபாச படத்தை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிஉள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விசாரணையை தொடங்கிவிட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Post your comment





Related News
தொல்லை கொடுத்தவர்களுக்கு பில்லா ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித்!
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுக்கே இத்தனை கோடி தான் சம்பளமா? ரகுல் பிரீத் சிங் ஷாக்
இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான தகவல்
அஞ்சலியுடன் நடிக்கும் சியான் விக்ரம்! லேட்டஸ்ட் தகவல்
ஸ்கூல் நடத்தி வரும் தீரன், திருநாள் பின்னணி பாடகி நமீதா!
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
இனியும் இப்படி நடக்க கூடாது - அசோக்கின் மரணம் குறித்து கமல்ஹாசனின் பதிவு
தளபதி விஜயின் முதல் படம், முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வெளிவராத தகவல்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions