கவர்ச்சியுடன் சினிமாவுக்கு ரீ-என்ட்ரியாகும் அனுயா

Bookmark and Share

கவர்ச்சியுடன் சினிமாவுக்கு ரீ-என்ட்ரியாகும் அனுயா

ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் நடித்தவர் அனுயா. இப்படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து, ‘மதுரை சம்பவம்’, ‘நண்பன்’, ‘நகரம்’ ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக 2012-ஆம் ஆண்டு ‘நான்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இதையடுத்து, படவாய்ப்புகள் இவரைத் தேடி வரவில்லை.

இதனால், சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், தற்போது பெண்ணை மையப்படுத்தி உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்க அனுயா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், சினிமாவுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி ஆகவிருக்கிறார் அனுயா.

இதுகுறித்து அனுயா கூறும்போது, என்னுடைய குடும்ப பிரச்சினை காரணமாக மும்பையில் இருந்ததால் தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை. முதலில் அறிமுகமானதைவிட தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறேன்.

நடிப்பு திறனை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் கவர்ச்சியான வேடத்திலும் நடிக்க தயாராகியிருக்கிறேன். கவர்ச்சி என்பது நடிப்பின் ஒரு பகுதிதான் என்று கூறியுள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions