அன்வர் ரஷீத் விலகலுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்..!

Bookmark and Share

அன்வர் ரஷீத் விலகலுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்..!

பிரச்சனை என வந்தால் தீர்த்து வைக்கத்தான் சங்கம் இருக்கு. ஆனால் அவர்கள் அதற்கான முயற்சியையே எடுக்காவிட்டால் அப்புறம் சங்கத்தில் இருந்து என்ன பிரயோஜனம் என கடும் வருத்ததுடன் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் இயக்குனரும் தயாரிப்பாளருமான அன்வர் ரஷீத்.

சமீபத்தில் இவர் தயாரிப்பில் அல்போன்ஸ் புத்தரன் இயக்கத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்  பிரேமம் படத்தின் திருட்டு விசிடி விற்பனை மற்றும் ஆன்லைனில் படம் திருட்டுத்தனமாக வெளியானது இவை குறித்து தயாரிப்பாளர் சங்கம் எந்த ஒரு தீர்வையும் தனக்கு வழங்கவில்லை என தனது விலகலுக்கு காரணமாக குற்றம் சாட்டியுள்ளார் அன்வர் ரஷீத்.

குறிப்பாக ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட படத்தின் காப்பி சென்சார் செய்யப்பட காபி என்றும், அது கனடாவில் இருந்து பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அன்வர் ரஷீத், சென்னை மற்றும் திருவனந்தபுரம் இரண்டு இடங்களில், இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்சன் நடைபெற்ற முக்கிய ஸ்டுடியோக்களில் ஏன் சோதனையும் விசாரணையும் நடத்த தயங்குகின்றனர் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் அன்வர் குறிப்பிடும் ஸ்டுடியோக்கள் இரண்டுமே இரண்டு மலையாள பிரபலங்களுக்கு சொந்தமானவை என்பதால் அங்கே விசாரிக்க போலீஸும், தயாரிப்பாளர் சங்கமும் தயங்குவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை என சொல்லி சங்கத்தை விட்டு வெளியேறும் அன்வர் ரஷீத்தின் செயலுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தாங்கள் இந்தப்பிரச்சனையில் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions