“அன்வர் ரஷீத் இனி 'அம்பானி' ரஷீத்” - ஜெயசூர்யா பாராட்டு..!

Bookmark and Share

“அன்வர் ரஷீத் இனி 'அம்பானி' ரஷீத்” - ஜெயசூர்யா பாராட்டு..!

தமிழ் ரசிகர்களுக்கு மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத்தை பற்றிய ஒரு சிறிய முன்னுரையை சொல்லிவிட்டு பின்னர் எதற்காக நடிகர் ஜெயசூர்யா அவரை அம்பானி ரேஞ்சுக்கு புகழ்ந்துள்ளார் என பார்க்கலாம்.

ஓர் அறிமுக இயக்குனராக 2005ல் மம்முட்டியை வைத்து அன்வர் ரஷீத் இயக்கிய 'ராஜமாணிக்கம்' என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் மற்ற முன்னணி நடிகர்களையும், ஏன் இயக்குனர்களையும் கூட வாய்பிளக்க வைத்தது.

அதேபோல மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் இரண்டாவது படமான 'உஸ்தாத் ஹோட்டல்' மூலம் அவரை முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் சேர்த்தவரும்  அன்வர் ரஷீத் தான். கடந்த வருடம் மலையாள ரசிகர்களை கிறங்கடித்த 'பெங்களூரு டேய்ஸ்' படம் இவரது தயாரிப்பு தான் என்று சொன்னால் இப்போது தெரிகிறதா இவரது வீரதீர பராக்கிரமங்களை பற்றி.

கடந்த வாரம் நிவின்பாலி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பிரேமம்' படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். அதனால் தான், வசூல் மழையில் நனைந்துகொண்டிருக்கும் இவரை, இனி அம்பானி ரஷீத் என குறிப்பிடலாம் என்று கூறியுள்ளார் நடிகர் ஜெயசூர்யா.

அதுமட்டுமல்ல, லட்டு மாதிரி மூன்று கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியதற்காக படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கும் ஸ்பெஷலாக நன்றிகளை தெரிவித்துள்ளார் ஜெயசூர்யா.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions