ஜர்னலிஸ்ட்., அசிஸ்டன்ட் கமிஷனர்.. இப்போ லாயர் - அபர்ணாவின் அதிரடி முகங்கள்..

Bookmark and Share

ஜர்னலிஸ்ட்., அசிஸ்டன்ட் கமிஷனர்.. இப்போ லாயர் - அபர்ணாவின் அதிரடி முகங்கள்..

அதிரடி கேரக்டர்களுக்கு பெயர் போனவர் தான் மலையாள நடிகை அபர்ணா கோபிநாத். 'முன்னறியிப்பு' படத்தில் ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட், சமீபத்தில் வெளியான 'ஒன்னாம் லோக மஹாயுத்தம்' படத்தில் அசிஸ்டன்ட் கமிஷனர் என படத்திற்கு படம் கேரக்டர்களை தேர்ந்தெடுப்பதிலும் நடிப்பதிலும் வித்தியாசம் காட்டுபவர்.

அந்தவகையில் தற்போது 'எண்டே சத்யநேஸ்வன பரீட்சைகள்' என்கிற படத்தில் லாயராக நடிக்கிறார் அபர்ணா. இவரது சக லாயர்களாக ரகுமானும், சங்கர் ராமகிருஷ்ணனும் நடிக்கின்றனர்.

அபர்ணாவிடம் முதலில் சாதாரணமாவ ஒரு நான்சென்ஸ் கேஸ் வருகிறது. ஆனால் போகப்போக அது விஸ்வரூபமெடுத்து அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி குடைச்சலை கொடுக்கிறது.

அதன்பின் இந்த மூவர் கூட்டணி ஒன்றிணைந்து இந்த பிரச்சனையை எப்படி முடிவுக்கு கொண்டுவருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாம்.. இந்தப்படத்தை சுபைல் சுரேந்திரன் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்திலாவது தனது பாப்கட்டிங் ஹேர்ஸ்டைலை மாற்றுவாரா அபர்ணா கோபிநாத்..?


Post your comment





Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
நீயா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா?
கோபிநாத்.. கூச்சமில்லாத பொம்மை! : உடைபடும் உண்மைகள்!
ஆம்பள கேரக்டர்களில் அசத்தும் அபர்ணா கோபிநாத்..!
தொகுப்பாளராக நடிக்க மறுக்கும் கோபிநாத்..!
ஆக்ஷன் நடிகர் ஆனார் நீயா நானா கோபி!
ரகசியமாக நடந்து முடிந்த எஸ்.பி.பி.சரண் திருமணம்
விளம்பரங்களில் பிசியான நடிகை !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions