உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்

Bookmark and Share

உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்

`சரவணன் இருக்க பயமேன்' படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தற்போது, `பெதுவாக என் மனசு தங்கம்', `இப்படை வெல்லும்' ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் `பெதுவாக என் மனசு தங்கம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த இரு படங்களை முடித்த பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருக்கும் இப்படம் ஒரு மலையாள படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாஷில் நடிப்பில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `மகேஷின்ட பிரதிகாரம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் உதயநிதி ஜோடியாக மலையாளத்தின் முன்னணி நடிகை நமீதா பிரமோத் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், உதயநிதிக்கு வில்லனாக நடிக்க தேசிய விருது பெற்ற தமிழின் முன்னணி நடிகரும்,

இயக்குநருமான சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படக்குழு மறுக்கவில்லை என்றாலும், அதனை உறுதிப்படுத்தவும் இல்லை. எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்தது தான் - நாயகி சாய் பல்லவி
காதலனுடன் ராஜா ராணி வைஷாலி - வைரலாகும் புகைப்படம்.!
தெய்வமகள் பிரகாஷின் மனைவி இந்த பிரபல நடிகை தான் - வியக்க வைக்கும் புகைப்படம்.!
நம்ப மறுத்த விவேக் ஓபராய் ; சாதித்து காட்டிய ஆர்கே..!
பணத்திற்காக தான் அதை எல்லாம் காட்டி நடித்தேன் - பரபரப்பை ஏற்படுத்திய தளபதி நாயகி.!
விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! அதிகாரபூர்வ தகவல்
விஸ்வாசம் படத்தின் இணைந்த முன்னணி நடிகர் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சூப்பர் ஸ்டாரால் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித், விஜய் - அதிர்ச்சி தகவல்.!
சூர்யா 36-ல் இருந்து விலகிடுவேன், மிரட்டும் முன்னணி நடிகை - என்னாச்சு தெரியுமா?
பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions