சகலகலா வல்லவன் ஆக மாறிய அப்பாடக்கர்

Bookmark and Share

சகலகலா வல்லவன் ஆக மாறிய அப்பாடக்கர்

ரோமியோ ஜூலியட் படத்தை அடுத்து ஜெயம்ரவியின் நடிப்பில் இம்மாத இறுதியில் வெளிவரவிருக்கும் படம் அப்பாடக்கர். முன்னணி ஹீரோக்களை வைத்து பல வெற்றிப்படங்களைத் தயாரித்த லட்சுமி மூவிமேக்கர்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்துள்ள படம் இது.

சுராஜ் இயக்கும் இப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக அஞ்சலி, த்ரிஷா இருவரும் நடித்துள்ளனர். சந்தானத்தின் பிரபலமான வசனமான அப்பாடக்கர் என்பதையே படத்தின் தலைப்பாக வைத்திருந்தனர். பட பணிகள் நிறைவுற்று விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளநிலையில் அப்பாடக்கர் படத்தின் தலைப்பை மாற்றி உள்ளனர்.

அதாவது சகலகலா வல்லவன் என தற்போது பெயரை மாற்றி உள்ளனர். எண்பதுகளில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் சகலகலா வல்லவன். ஏவிஎம் தயாரித்த இப்படத்தின் வெற்றிக்குப் பிறகே கமர்ஷியல் ஹீரோவாக உருவெடுத்தார் கமல்.

ஏவிம் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடித்த பாயும் புலி என்ற தலைப்பு தற்போது விஷால் நடித்துள்ள படத்துக்கு தலைப்பாகி இருக்கிறது. அதே ஏவிஎம் நிறுவனத்தின் மற்றொரு தலைப்பான சகலகலா வல்லவன் தற்போது ஜெயம்ரவி படத்துக்கு தலைப்பாகி இருக்கிறது.

டைரக்டர்களே என்னாச்சு உங்களுக்கு? சொந்தமாக ஒரு டைட்டில் கூட உங்களால் யோசிக்க முடியலையா?


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions