படத்திற்கு கேளிக்கை வரி : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Bookmark and Share

படத்திற்கு கேளிக்கை வரி : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

படத்திற்கு கேளிக்கை வரி அளிப்பது தொடர்பாக, 30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று திரைப்பட பார்வைக்குழுவிற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தி்ல், சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான "ஏழாம் அறிவு" திரைப்படத்தை, உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்திருந்தது.

இந்த படத்திற்கு கேளிக்கை வரி அளிக்க காலதாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக, தமது நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டில், உதயநிதி ஸ்டாலின் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பந்த் ஆகியோர், படத்திற்கு கேளிக்கை வரி அளிப்பது தொடர்பாக, 30 நாட்களுக்குள், திரைப்பட பார்வைக்குழு முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


Post your comment





Related News
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா? - நடிகை ஓவியா விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions