ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து யாருடண் கூட்டணி?

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து யாருடண் கூட்டணி?

கத்தி படத்தை அடுத்து தற்போது பாலிவுட்டில்  முகாமிட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மௌனகுரு படத்தின் ரீமேக்காக அகிரா படத்தை இயக்கி வருகிறார். சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கும் அகிரா ஹிந்தி படத்தில் இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை ராய் லக்ஷ்மி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.  இப்படத்தின் வேலைகளில்  தற்போது பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். 

அகிரா பட பணிகள் விரைவில் முடிவடையவிருக்கின்றன. இதனால் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் எது? யார் ஹீரோ? போன்ற கேள்விகள் தற்போது கோலிவுட்டில் விவாதப்பொருளாக மாறி வருகிறது. டெக்னாலஜி சம்பந்தப்பட்ட க்ரைம் த்ரில்லர் கதையைத்தான் தன்னுடைய அடுத்தப்படமாக இயக்கப்போவதாக ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய நட்பு வட்டத்தில் சொன்னதாகவும் ஒரு தகவல்.

அப்படத்திற்காக விஜய், அஜித் இருவரையும் ஏ.ஆர்.முருகதாஸ் அணுகியிருப்பதாக தகவல். தற்போது அட்லி இயக்கும் படத்தில் விஜய்யும், வீரம் சிவா இயக்கும் படத்தில் அஜித்தும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த இரண்டு படங்களும் முடிவதற்கு எப்படியும் இந்த வருடக் கடைசியாகிவிடும்.  

அதற்கு முன்பாகவே அஜித் விஜய் இருவரில் ஒருவருக்கு கதையைச் சொல்லி ஓகே வாங்க திட்டமிட்டுள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அவரது இயக்கத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions