ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஹீரோ விஜய் அல்லது மகேஷ்பாபு ?

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஹீரோ விஜய் அல்லது மகேஷ்பாபு ?

கத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கும் அகிரா படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. அதற்கடுத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கப் போவது யார் என்பது சஸ்பென்சாகவே உள்ளது.

ஆனால், தற்போது டோலிவுட்டில் மகேஷ் பாபு நடிக்கப் போகிறார் என்றும் செய்தி வந்துள்ளதால் அந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸே பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து தயாரிக்கப் போகிறார் என்று பேச்சுகள் எழுந்துள்ளது.

ஆனால், விஜய் ரசிகர்களோ,  விஜய்யின் அடுத்த படம் கண்டிப்பாக முருகதாஸுடன் தான் இருக்கும் என்கிறார்கள். விஜய் தற்போது அட்லீ இயக்கும் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும். அதே சமயம் சசிகுமார், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் விஜய்யை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது. 

அடுத்த படம் ஆக்ஷன் படமாக இல்லாமல் ஒரு இனிமையான காதல் கதையாக இருக்க வேண்டும் என விஜய் நினைப்பதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions