அஜித்துக்கு ‘தல’, விஜய்க்கு ‘குட்டி மணிரத்னம்’- இவர்தான் முருகதாஸ்!

Bookmark and Share

அஜித்துக்கு ‘தல’, விஜய்க்கு ‘குட்டி மணிரத்னம்’- இவர்தான் முருகதாஸ்!

கஜினி என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தித் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஏ.ஆர். முருகதாஸ். அமீர் கான் முதல் இளையதளபதி விஜய் வரை அனைத்து முன்னணி நடிகர்களின் அன்பை பெற்றிருக்கும் இவர் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர். 

தமிழ், தெலுங்கு, இந்தி என இதுவரை முருகதாஸ் 9  படங்களை இயக்கியுள்ளார். 4 படங்களைத் தயாரித்துள்ளார். ஏறத்தாழ அனைத்துமே சூப்பர் ஹிட். அதிலும் தமிழில் இவர் இயக்கிய துப்பாக்கி மற்றும் கத்தி படங்கள் 100 கோடியைத் தொட்டவை.

முருகதாஸ் பல நடிகர்களுக்கு திருப்புமுனை படங்களை அளித்துள்ளார். அந்த வகயில் ரமணா திரைப்படம் வசூலில் ஹிட் அடித்ததோடு நடிகர் விஜயகாந்திற்கு ஒரு முக்கியப் படமாக அமைந்தது. இது தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இளையதளபதி விஜய்யால் ‘குட்டி மணிரத்னம்’ என்று அழைக்கப்படுபவர். அஜித்குமாரை வைத்து இவர் இயக்கிய தீனா இவரது சினிமா வாழ்கையின் முதல் மைல்கல் என்றே கூறலாம். அந்த படத்தில் அஜித்திற்கு இவர் அளித்த ‘தல’ என்னும் பெயர், இன்று அவருக்கு ஒரு பட்டமாகவே அமைந்து விட்டது.

இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் ‘கமர்ஷியல்’ படங்கள் என்றாலும், வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் நிச்சயம் ஏதேனும் ஒரு வசனமோ அல்லது காட்சியோ நம் மனதை தொட்டுப் பதிந்து விடும். சமுக பிரச்சனையை மிக தைரியமாக அழுத்தமாக ரசிக்கும்படி கொடுப்பத்தில் வல்லவர்.

இவர் படங்களில் அதிகம் மது அருந்தும் காட்சிகளோ இரட்டை அர்த்த வசனங்கள் இது போன்ற காட்சிகள் அவருடைய படத்தில் அதிகம் வைப்பதில்லை. பாலிவுட்டில் 100 கோடி மைல்கல்லை தொட்ட வெகு சில இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கிய அனைத்துப் படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியிருக்கிறது. 

மேலும் இவரின் இன்னொரு பெருமை இவரது உதவி இயக்குநர்கள்.  எந்த மேடைக்குச் சென்றாலும் தவறாமல் தன் உதவி இயக்குநர்களின் பங்களிப்பை பதித்து விடுவார். மேலும் பேட்டிகளில் தனது உதவி இயக்குநர்கள் தான் என் வெற்றிக்குக் காரணம் என அடிக்கடி கூறுவார்.

எங்கேயும் எப்போதும் ‘ சரவணன்’ ,’அரிமா நம்பி’ ஆனந்த் சங்கர், ‘மான் கராத்தே’ திருக்குமரன், ‘டிமாண்டி காலனி’ அஜய் ஞானமுத்து என இது வரை 5 இயக்குநர்கள் இவர் பட்டறையிலிருந்து வெளிவந்துள்ளனர்.

அதிக ஆடம்பரத்தை விரும்பாதவர். எத்தனை வெற்றிகளைக் கண்டாலும் தலைக்கனம் இல்லாமல் தன்னடக்கதோடு நடந்து கொள்வார். ஒரு இயக்குநர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல மனிதர் ஏ.ஆர். முருகதாஸ் என்றே கூறலான்.


Post your comment

Related News
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
கந்துவட்டி கும்பலுடன் எனக்கு தொடர்பா? - கருணாகரன் விளக்கம்
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions