ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அகிரா

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அகிரா

கத்தி படத்தை அடுத்து தமிழ்ப்படம் இயக்க இடைவேளைவிட்டுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பாலிவுட்டில் முகாமிட்டிருக்கிறார். அமீர்கானை வைத்து இயக்கிய கஜினி படத்தின் வெற்றிக்குப் பிறகு துப்பாக்கி படத்தின் ஹிந்தி ரீமேக்கான ஹாலிடே படத்தை இயக்கினார்.

இவ்விரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராக உள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். கத்தி படத்தை தமிழில் இயக்கியபோது ஏற்பட்ட கதைத்திருட்டு விவகாரத்தினால் மண்டைகாய்ந்து போனதால் இப்போதைக்கு தமிழ்ப்படம் இயக்க வேண்டாம் என முடிவு செய்து ஹிந்திக்குப்போனார்.

அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் கதையைத்தான் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்கிறார். தமிழில் அருள்நிதி நடித்த ஹீரோ கேரக்டரை ஹிந்திக்கு ஹீரோயின் கேரக்டராக மாற்றிவிட்டார்.

சோனாக்ஷி சின்ஹா கதைநாயகியாக நடிக்கிறார். டைட்டில் வைக்காமலே படப்பிடிப்பு நடைபெற்று வந்த இந்தப்படத்துக்கு அகிரா என்று தலைப்பு வைத்துள்ளார். அகிரா என்றால் என்ன அர்த்தம்? சமஸ்கிருதத்தில் வசீகரமான பலம் என்று அர்த்தமாம்.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions