வட அமெரிக்காவின் 13 பெருநகரங்களில் மார்ச் 21 முதல் ஜூன் 14 வரை ஏ.ஆர்.ரஹ்மானின் தொடர் இசை நிகழ்ச்சி

Bookmark and Share

வட அமெரிக்காவின் 13 பெருநகரங்களில் மார்ச் 21 முதல் ஜூன் 14 வரை ஏ.ஆர்.ரஹ்மானின் தொடர் இசை நிகழ்ச்சி

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வட அமெரிக்காவின் 13 பெருநகரங்களில் மார்ச் 21 முதல் ஜூன் 14-ம் தேதி வரை தொடர் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.

ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

'ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார்.

இவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான 'ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து' வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான் இம்மாதம் 21-ம் தேதியில் இருந்து வரும் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை வட அமெரிக்காவில் சுமார் 4 மாதகாலம் தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.

தற்போது, உலக பிரபலமான கால்பந்தாட்ட வீரர் பீலே-வின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகின்றது. இந்த படத்துக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான்(48), இந்த வட அமெரிக்க இசைப்பயணத்தின் போது இங்குள்ள 13 முக்கிய பெருநகரங்களில் ‘ஏ.ஆர். ரஹ்மான்-ஒரு நெருக்கமான இசைப்பயணம்’ என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

‘ரோஜா’ தொடங்கி இதுவரை 20 ஆண்டுகளாக இசையமைத்துள்ள சுமார் 100 திரைப்படங்களின் சிறந்த பாடல்கள் மற்றும் தனி இசைக்கோர்வை போன்றவை இந்த நிகழ்ச்சிகளின் போது இசைக்கப்படும் எனவும், இந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பதற்கான டிக்கெட் விற்பனை மார்ச் 6-ம் தேதி தொடங்கும். வி.ஐ.பி. பேக்கேஜ் டிக்கெட் விற்பனை மார்ச் 4 வரையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவில் கடந்த 2010-ம் ஆண்டு இதேபோல் இசை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஏ.ஆர். ரஹ்மான் சுமார் 5 ஆண்டுகளூக்கு பிறகு தற்போது மீண்டும் அங்கு நிகழ்ச்சிகளை நடத்த செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions