சர்வதேச இசை ஜாம்பவான்களாக இந்தியர்கள் : ரகுமான் விருப்பம்

Bookmark and Share

சர்வதேச இசை ஜாம்பவான்களாக இந்தியர்கள் : ரகுமான் விருப்பம்

சர்வதேச அளவில், இசை ஜாம்பவான்களாக, இந்திய கலைஞர்கள்  உருவாக வேண்டும் எஜ்பதே என் விருப்பம் என்று ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். சென்னையில், நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரகுமான், பெர்க்லி இசை கல்லூரி தலைவர் ரோஜர் ஹெச். பிரெளன் கலந்துகொண்டனர்.

 இதில், பெர்க்லி இசை கல்லூரி தலைவர் பிரெளன் கூறியதாவது, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமானின் இசைச்சேவையை கவுரவிக்கும் வகையில், அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தி்ல் உள்ள பெர்க்லி இசை கல்லூரி, ரகுமான் பெயரில், ஸ்காலர்ஷிப் வழங்க உள்ளோம்.

இந்தியாவில் இருந்து, இசை கற்கும் பொருட்டு, 2016ம் ஆண்டில், பெர்க்லி கல்லூரியில் சேரும் ஒரு மாணவருக்கு, இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் என்றும்,  பெர்க்லி இசை கல்லூரியில், தற்போதைய அளவில் 46 மாணவர்கள் இசை பயின்று வருவதாக, அவர் கூறினார்.

பின்னர் ரகுமான் பேசியதாவது, இசையில் பேரார்வம் உடைய மாணவர்களுக்கு, ஆண்டுதோறும், 60 மாணவர்களுக்கு இசைப்பயிற்சி வழங்கி வருகிறேன், இந்தாண்டு முதல் மாணவர்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் கூறினார். 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions