தன் பட இயக்குனரைத் தேர்வு செய்த ஏ.ஆர்.ரகுமான்

Bookmark and Share

தன் பட இயக்குனரைத் தேர்வு செய்த ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக வெகு நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தார். அதோடு அவர் தயாரிக்கப் போகும் முதல் படத்திற்கு அவரே கதை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது ரகுமான் அவர் தயாரிக்கப் போகும் படத்திற்கு இயக்குனரைத் தேர்வு செய்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒய்எம் மூவீஸ் என்று தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பெயரைத் தேர்வு செய்துள்ளாராம்.

இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் இளம் இயக்குனரான விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவரை ரகுமான் இயக்குனராக அறிமுகப்படுத்த உள்ளாராம். விஷ்வேஷ், இசையிலும், நாடக நடிப்பிலும் திறமைசாலியாம்.

ஆமீர் கான் நடத்திய 'சத்யமேவ ஜெயதே' டிவி நிகழ்ச்சிக்காக பல புரோமோக்களைக் இயக்கிக் கொடுத்தவராம். இந்தப் படத்தை ரகுமான், ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.

இந்தப் படத்தை ஒரே சமயத்தில் ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டு மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்தப் படத்திற்கு ரகுமான் இசையைமப்பாரா அல்லது தயாரிப்புடன் மட்டும் நிறுத்திக் கொள்வாரா என்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions