ஈரான் மக்களை கவர்ந்த ஏ.ஆர்.ரகுமான் இசை

Bookmark and Share

ஈரான் மக்களை கவர்ந்த ஏ.ஆர்.ரகுமான் இசை

ஆஸ்கார் நாயகன் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலக அளவில் பிரபலமானவர். பல்வேறு மொழி படங்களுக்கு இசை அமைத்து முத்திரை பதித்து வருகிறார். 

சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஈரான் நாட்டு படம் ஒன்றுக்கு இசை அமைத்து அந்த நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

மஜீத்மகீதி என்ற டைரக்டர் இயக்கிய  'முகமத் தி மெசஞ்சர் ஆப் காட்' என்ற படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. இது முகமது நபியின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்துக்கு இசை அமைக்க 200 இசை கலைஞர்களை பயன்படுத்தி உள்ளார். 

ஈராக், ஜெர்மனி, பிரான்ஸ், எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளில் ரிக்கார்டிங் நடத்தப்பட்டது. இறுதியில் இந்த படத்துக்கான இசை 'மிக்சிங்' சென்னையில் நடந்துள்ளது. 

இது பற்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான், 'நான் இசை அமைத்த சிக்கலான இசை ஆல்பத்தில் இதுவும் ஒன்று. இஸ்லாம் மதம் அமைதி, மனிதாபிமானம் ஆகியவற்றை அதிகமாக போதிக்கிறது. இந்த படத்துக்கு இசை அமைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார். ஏ.ஆர்.ரகுமானுக்கு இப்போது ஈரானிலும் இசை ரசிகர்கள் ஏராளமாகிவிட்டனர்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions