ரகுமானை சிரிக்க வைத்த ரசிகன்!

Bookmark and Share

ரகுமானை சிரிக்க வைத்த ரசிகன்!

ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் அறிவித்தார்.

இதை அடுத்து, ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்தது பற்றி ஏ.ஆர். ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அதில் அவர் “நான் அந்த படத்தை தயாரிக்கவோ அல்லது இயக்கவோ இல்லை. வெறும் இசை மட்டும் தான் அமைத்துள்ளேன். இந்த படத்தில் வேலை செய்தது மூலம் எனக்கு கிடைத்த ஆன்மீக அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்துக்கொள்ள விருப்பம் இல்லை. நான் இந்த படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்பது கடவுளின் முடிவு.

இது தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” என அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பல தரப்பிலிருந்து அவருக்கு ஆதரவாகவும் பத்வா விதித்தவருக்கு எதிராகவும் கருத்துக்கள் வெளியான வண்ணம் உள்ளது.

இந்நிலையில் ரஹ்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவர் “கடந்த சில நாட்களாக அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்தப்படி உள்ளனர். அவை அன்பு நிரம்பியவையாகவும், நகைச்சுவை உணர்வுடணும், நம்பிக்கை தரும் வகையிலும் உள்ளது. இதற்காக என் சக கலைஞர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் என் ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இது பற்றி இணையத்தில் படித்த பதிவு ஒன்று என்னை சிரிக்க வைத்தது” என குறிப்பிட்டு அந்த பதிவை பகிர்ந்துள்ளார்.

ஏ.ஆர். ரகுமானை சிரிக்க வைத்த பதிவு

"ஓ! கடவுளே... உங்களை பின்பற்றுபவர்களிடமிருந்து (அனைத்து வகையான) என்னை காப்பாற்றும்" 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions