ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏஆர் ரஹ்மான் உண்ணாவிரதம்!

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏஆர் ரஹ்மான் உண்ணாவிரதம்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன் வீட்டில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஆஸ்கர் தமிழன் ஏஆர் ரஹ்மான் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியுள்ள பீட்டா அமைப்பைத் தடை செய்யக கோரியும் வரலாறு காணாத போராட்டங்கள், தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் நடந்து வருகின்றன.

சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து போராடி வருகின்றனர். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் ஐடி துறை ஊழியர்கள் எழுச்சி பிரமிக்க வைப்பதாய் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலுமே போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

நான்காவது நாட்களாகத் தொடரும் இந்தப் போராட்டங்களைப் பார்த்து அனைத்து மாநில மக்களுமே தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். திரையுலகினரும் இந்தப் பிரச்சினைக்குக் குரல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், ஆஸ்கர் நாயகனான ஏ ஆர் ரஹ்மான் தனது ஆதரவை ஜல்லிக்கட்டுக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், "ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் தமிழகத்தின் உணர்வுகளை ஆதரித்து நான் நாளை ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions