ஒரே மாதிரியா இசையமைத்து போரடித்துவிட்டது - ரஹ்மான் சலிப்பு

Bookmark and Share

ஒரே மாதிரியா இசையமைத்து போரடித்துவிட்டது - ரஹ்மான் சலிப்பு

ரஹ்மானின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ஜெய்ஹோ ஆவணப்படம் நியூயார்க்கில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதற்காக நியூயார்க் வந்த ரஹ்மான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,இப்போது திரைக்கதை, திரைப்பட தயாரிப்பு போன்ற துறைகளில் தீவிரமாக செயல்படத் துவங்கியுள்ளேன்.

ஒரு திரைப்படத்தில் நடிக்கிறேன். அனைத்து திரைப்படங்களுக்குமே ஐந்து மெலோடி பாடல்கள், ஒரு குத்துப் பாட்டு என்று தான் இசையமைக்க வேண்டியுள்ளது. ஒரே மாதிரியாக, திரும்ப திரும்ப இசையமைப்பது போரடித்து விட்டது.

இதை தாண்டி புதிதாகவும், சவாலாகவும் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.  எனவே தான் திரைக்கதை எழுதுவது, படங்கள் தயாரிப்பது போன்ற துறை களில் கால் பதித்துள்ளேன்.

பாம்பே ட்ரீம்ஸ் இசை ஆல்பத்துக்கான பணியில் ஈடுபட்டிருந்த போது, பிரிட்டனைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாய்ட் வெப்பேர், ஙஉங்களுக்கு கதை, திரைக்கதை குறித்து ஆர்வம் உள்ளதா என கேட்டார்.

ஒரு நாள், நம்மால் ஏன் முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான தேடல் தான், தற்போது என்னை திரைக்கதை எழுத வைத்துள்ளது என்றார் அவர்.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா? - நடிகை ஓவியா விளக்கம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions