ஏ.ஆர்.ரகுமானை பின்பற்றும் அனிருத்?

Bookmark and Share

ஏ.ஆர்.ரகுமானை பின்பற்றும் அனிருத்?

வந்த வேகத்திலேயே சிக்சர், பவுண்டரி என்று அடித்து மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணி விட்டார் இசையமைப்பாளர் அனிருத். அதோடு, மெர்சலாயிட்டேன் என்ற பாடலை 'ஐ' படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடியபிறகு பாடகராகவும் அவர் புகழ் இந்திய அளவில் பரவியுள்ளது.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானைப்போலவே அனிருத்தும், இரவு நேரத்தில் மட்டுமே கம்போஸிங், ரெக்கார்டிங் வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் ஏ.ஆர்.ரகுமானை போன்ற இசையமைப்பாளராக வேண்டும் என்பதற்காக அவர் பாணியை பின்பற்றுகிறீர்களா? என்று அனிருத்தைக் கேட்டால், மறுக்கிறார்.

நான் அனைத்து இசையமைப்பாளர்களின் இசையையும் ரசிப்பேன். மற்றபடி இசையமைக்க வேண்டும் என்கிறபோது எனது பாணியில்தான் இசையமைப்பேன். யாரையும் பின்பற்ற நான் நினைத்ததில்லை.

மேலும், இரவு நேரங்களில் நான் இசையமைக்க காரணம், அப்போது தொந்தரவு இல்லாமல் இருக்கிறது. அதனால் இசையில் முழுசாக இறங்கி நல்ல டியூன்களை உருவாக்க முடிகிறது. மற்றபடி 'ரகுமான்' இரவில் கம்போஸிங் செய்கிறார் என்பதற்காக நானும் அந்த நேரத்தை தேர்வு செய்யவில்லை என்கிறார் அனிருத்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions