ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு எப்படி நன்றி சொல்வது?- நெகிழும் புதுமுக இயக்குநர்!

Bookmark and Share

ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு எப்படி நன்றி சொல்வது?- நெகிழும் புதுமுக இயக்குநர்!

‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் செய்த உதவி நெகிழவைக்கிறது. என்று இயக்குநர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசும் போது.

” எங்கள் ‘துருவங்கள் பதினாறு’ படக்குழு முழுக்க இளைஞர்கள் கொண்டு உருவாக்கப் பட்டது .படத்தில் நடிக்க நடிகர் ரகுமான்சார் சம்மதித்தால் போதும் என்று இருந்தோம் ஏனென்றால் அவரை விட்டு விட்டு வேறு யாரையும் அந்தப் பாத்திரத்திற்கு என்னால் நினைக்க முடியவில்லை.

அவர் எங்கள் குழுவுக்குள் வந்தபிறகு தொடங்கியது எல்லாமே நன்மையில் முடிய ஆரம்பித்தது. நாலா பக்கமிருந்தும் நல்லெண்ண அதிர்வலைகள் வர ஆரம்பித்து விட்டன. அதுவே எங்களை முன்னோக்கி வழி நடத்தியது.

எங்கள் படக்குழுவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் செய்த உதவியும் அளித்த ஊக்கமும் தந்த ஆதரவும் எங்களுக்குப் ப லம் சேர்த்து எங்களை மேலும் வலுப்பெற வைத்தது. அவர் எங்கள் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் .

அது யூடியூபில் பெரிய ஹிட்டடித்தது.அதன் பிறகு எங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பு விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்து விட்டது. புல்வெளியில் கிடந்த நாங்கள் விண்வெளியில் மிதக்கும் உணர்வைப் பெற்றோம் .

சிறிய அளவில் அகல் விளக்கு போல இருந்த படம் பகல்விளக்கு சூரியன் போல பெரிதாகிவிட்டது. அது படத்தின் வியாபாரத்துக்கு பெரிதும் உதவியது. ட்ரீம் பேக்டரி, வீனஸ் இன்போடெய்ன் மெண்ட் என.பெரிய நல்ல நிறுவனங்கள் படத்தை வெளியிட முன்வந்தன.

படம் டிசம்பர் 29–ல் வெளியாக இருக்கிறது. இப்படத்தினை விளம்பரப் படுத்தும் வகையில் ‘காற்றில் ஒரு ராஜாளி’, என்கிற ப்ரோமோ சாங் அதாவது விளம்பரப் பாடலை உருவாக்கி இருக்கிறோம்.

 
அதை நாளை ஏ.ஆர். ரகுமான்சார் ட்விட்டரில் வெளியிடுகிறார். அவர் கைபட்டதும் மேலும் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி விடும் படம்.


Post your comment





Related News
நயன்தாராவின் ‘டோரா’ படத்தில் போராடி வாய்ப்பு பெற்றேன்: வெற்றி
கற்பழிப்பு வழக்கில் இருந்து பாடகர் அங்கீத் திவாரி விடுதலை
'தபால்காரன்'.... புதிய படத் தொடக்க விழா!
பிரபல நடிகைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கல்லூரி மாணவன்- அவன் என்ன ஆனான் தெரியுமா?
இயக்குனரை கொல்ல முயற்சி! நடிகைக்கு மூன்றாண்டு சிறை
பாகுபலி ரசிகர்கள் இந்த பாலிவுட் இயக்குனரின் கால் தொட்டு கும்பிடுங்கள்: ராம் கோபால் வர்மா
பாகுபலியை பார்த்து பொறாமைப்படுகிறேன்! வெளிப்படையாகவே கூறிய முன்னணி தமிழ் இயக்குனர்
சத்யராஜ்க்கு வலுக்கும் வரவேற்புகள்! தமிழ் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா
வேர லெவலில் அட்டகாசம் செய்து அசத்தியுள்ள அஜித் ஃபேன்ஸ்! யார் தெரியுமா
வில்லனாக ஒரு ரவுண்டு வர ஆசை: `மாநகரம்' சதீஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions