மணிரத்னத்திற்காக பாடல் ஆசிரியரான ஏ.ஆர். ரஹ்மான்

Bookmark and Share

மணிரத்னத்திற்காக பாடல் ஆசிரியரான ஏ.ஆர். ரஹ்மான்

ஓகே கண்மணி படத்தில் வரும் மென்டல் மனதில் பாடல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் எடுத்துள்ள காதல் படம் ஓகே கண்மணி.

தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் பாடல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

மென்டல் மனதில் என்ற பாடல் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அதை யூடியூப்பில் பலர் பார்த்துள்ளனர்.மென்டல் மனதில் பாடலை மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் சேர்ந்து எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மென்டல் மனதில் முழுப்பாடலும் வரும் 17ம் தேதி வெளியிடப்படுகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள ஓகே கண்மணி படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மென்டல் மனதில் டீஸரைப் பார்த்த பலரும் அந்த பாடல் வரிகளை தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர்.


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions