ஏ.ஆர்.ரகுமானை 'டார்ச்சர்' செய்வேன் - மணிரத்னம்

Bookmark and Share

ஏ.ஆர்.ரகுமானை 'டார்ச்சர்' செய்வேன் - மணிரத்னம்

இசை உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படம் மூலம் 1992ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய “திருடா திருடா, பாம்பே, இருவர், தில் சே (ஹிந்தி), அலை பாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், யுவா (ஹிந்தி), ஆய்த எழுத்து, குரு (ஹிந்தி), ராவண் (ஹிந்தி), ராவணன், கடல், ஓ காதல் கண்மணி” ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இருவரும் 23 வருடங்களாக இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். மணிரத்னம் படம் என்றாலே ரகுமான் சிறப்பாக இசையமைத்துக் கொடுத்து விடுவார் என்ற பேச்சும் திரையுலகில் உண்டு.

மணிரத்னம் இயக்கிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்த போதும் அப்படிப்பட்ட பேச்சு இருந்தது.  ரகுமானிடம் இனிமையான பாடல்களைப் பெறுவதற்குக் காரணம் அவரிடம் “என்னுடைய ஐடியாக்களைச் சொல்லி மிகவும் டார்ச்சர் செய்து நல்ல இசையைப் பெற்று விடுவேன்,” என மணிரத்னம் சமீபத்தில் சொல்லியிருக்கிறார்.

மேலும் ரகுமானை “நான் அவரை முதன் முதலில் பார்த்த நாளிலிருந்து இன்று வரை அவர் அப்படியேதான் உள்ளார், சிறிதளவும் அவர் மாறவேயில்லை,” என்று பாராட்டியிருக்கிறார்.

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ இயக்குனர், இசையமைப்பாளர் கூட்டணி வெற்றிகரமாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் சுமார் 23 வருடங்களாக மணிரத்னம் - ரகுமான் கூட்டணி இன்றைய இளைஞர்களையும் கவரும் வண்ணம் இளமையுடன் இருப்பது அபூர்வமான விஷயம்தான்.

இந்த வயதிலும் எப்படி, இப்படி இளமையுடன் படத்தைக் கொடுக்க முடிகிறது என்று மணிரத்னத்தைக் கேட்டால், “படங்களை உருவாக்குவதற்கும், வயதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. எதுவுமே நமது மனதில்தான் இருக்கிறது. மனதால் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப் பொறுத்தே அது அமைகிறது,” என்கிறார்.

 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions