ஏ.ஆர்.ரகுமானின் மயக்கும் இசை வெளிநாட்டுப் பாடகி சிலிர்ப்பு

Bookmark and Share

ஏ.ஆர்.ரகுமானின் மயக்கும் இசை வெளிநாட்டுப் பாடகி சிலிர்ப்பு

கனடா நாட்டை சேர்ந்தப் பாடகி நடாலி டி லூசியோ. இவர் இப்போது இந்தி, மராத்தி, குஜராத்தி பாடல்களைப் பாடிவருகிறார்.

தமிழில், ‘ஐ’ படத்தில் இடம் பெற்ற, ‘ஐல ஐல ஐ, ஐல ஐல ஐ’ பாடலை பாடியுள்ள நடாலி கூறியதாவது:

இந்தியாவுக்கு பாட வருவேன் என நினைத்ததில்லை. இந்திய இசை அமைப்பாளர்களிடம் இருந்து அழைப்பு வரும் போது அதை எளிதாக மறுத்துவந்தேன். பாடகர் சோனு நிகாம் அவரது ஆல்பத்துக்காக என்னை அழைத்து வந்தார்.

அதைத் தொடர்ந்து இந்திய இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றத் தொடங்கினேன். ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பயணத்தில் நானும் உடன் சென்றது இனிமையான அனுபவம்.

அவர் இசை அமைப்பில், ‘ஐ’ படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளேன். அதில் இடம்பெற்றுள்ள ‘ஐல ஐல ஐ, ஐல ஐல ஐ’ பாடலை பாடியது மறக்க முடியாத அனுபவம்.

இந்தப் பாடலின் இந்தி பதிப்பிலும் நானே பாடியுள்ளேன். ஏ.ஆர்.ரகுமானின் இசை  மயக்குவதாக இருக்கிறது. 1993-ல் வெளியான  ‘திருடா திருடா’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த, ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ பாடல் எனக்கு பிடித்தமானது. அதை இப்போது நான் பாடி, யூடியூப்பில் ஏற்றியுள்ளேன். 


Post your comment





Related News
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
தமிழில் வெளியாகும் ராம் சரணின் ஆக்‌ஷன் படம்
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions