'ஓகே கண்மணி' வெற்றியைக் கொண்டாடிய ஏ.ஆர்.ரகுமான்

Bookmark and Share

'ஓகே கண்மணி' வெற்றியைக் கொண்டாடிய ஏ.ஆர்.ரகுமான்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு மன நிறைவான வெற்றியைத் தன் குழுவினருடன் கொண்டாடியிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'ஐ'  படத்தின் பாடல்கள் கூட பெரிதாகப் பேசப்படவில்லை.

அதற்கு முன் வெளிவந்த 'லிங்கா, காவியத் தலைவன்' ஆகிய படங்களின் பாடல்களும் ஹிட்டாகவில்லை, படமும் ஹிட்டாகவில்லை. 'கடல்' தோல்விக்குப் பிறகு தனது ஆஸ்தான இயக்குனரான மணிரத்னத்துடன் இணைந்து ரகுமான் பணியாற்றிய 'ஓ காதல் கண்மணி' பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் ஆனது, பாடல்களும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் வெற்றியை தனது குழுவினருடன் இணைந்து கொண்டாடியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். படத்திற்காகப் பணியாற்றிய இஞ்சினியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக் கலைஞர்கள் ஆகியோருடன் சென்னையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் விருந்துடன் கொண்டாடியிருக்கிறார்கள்.

தனது குழுவினருடன் அந்தக் கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்றும் தனது வழக்கமான  வசனத்துடன் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions