மருத்துவர்களால் குணமாக்க முடியாததை குணப்படுத்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான்! ஷங்கரின் கண்ணீர்

Bookmark and Share

மருத்துவர்களால் குணமாக்க முடியாததை குணப்படுத்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான்! ஷங்கரின் கண்ணீர்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எவ்வளவு பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் என்பது தெரியும். எப்போது பிசியான இவர் எந்திரன் படப்பிடிப்பின் போது என்ன செய்தார் தெரியுமா.

இயக்குனர் ஷங்கர் கண்ணீருடன் சொன்னது...''ஏ.ஆர்.ரஹ்மான்... நான் சந்தித்தவர்களிலேயே மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி.

என் மகன் அர்ஜித் பிறந்ததுல இருந்து தொடர்ந்து விரல் உடையறது, தாடை உடையறது, உடல்நிலை சரியில்லாமப் போறதுனு என்னென்ன துயரங்கள் உண்டோ...எல்லாத்தையும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தான்.

வாரம் ஒரு தடவையாவது டாக்டர்கிட்ட எதுக்காகவாவது அவனை அழைச்சிக்கிட்டுப் போக வேண்டியிருந்தது. ஆறு வயசுலயே எல்லா டாக்டர்களும் மருந்துகளும் அவனுக்கு அத்துப்படி.

இதைக் கேள்விப்பட்ட ரஹ்மான், 'ஷங்கருக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ... பையனை அழைச்சுக்கிட்டு மவுண்ட் ரோடு தர்ஹாவுக்கு வரச் சொல்லுங்க’னு அவர் மனைவி மூலமா என் மனைவிகிட்ட சொல்லியிருக்கார். நானும் பையனுக்குச் சரியானாப் போதும்னு போயிருந்தேன்.

பார்த்தா, ரஹ்மானே அவங்க அம்மாவோட தர்ஹாவுக்கு வந்திருந்தார். என் பையனுக்காக அரை மணி நேரம் ப்ரே பண்ணாங்க. மந்திரிச்சுக் கயிறு எல்லாம் கட்டினாங்க.

எவ்வளவு பிஸியானவர் ? எவ்வளவு பேர் அவர் ஸ்டுடியோவில் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானியா சில மணி நேரங்களை அர்ஜித்துக்காகச் செலவழிச்சது என்னை நெகிழ வெச்சுக் கண் கலங்க வெச்சிருச்சு.


Post your comment

Related News
பிக்பாஸ் கமல்ஹாசனின் அடுத்த சாதனை! ரசிகர்கள் குஷி
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
டாப் 5 லிஸ்டில் இடம் பெற்ற விஜய்! பிரம்மிக்க வைத்த விசயம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய் பிறந்த நாளுக்காக வித்தியாசமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! புகைப்படங்கள் இதோ
விஜய்யின் முந்தைய சாதனையை முறியடிக்காத சர்கார் பர்ஸ்ட் லுக்
வந்துட்டாரு சர்கார்: கீர்த்தி சுரேஷின் செம டுவிட்!
இது இல்லனா நீங்க இன்னும் ஸ்டைலிஷ்: சர்கார் விஜய்க்கு அன்புமணி டிவிட்!
எல்லோரும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இதோ!
உலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions