பெயரை மாற்றிய ஏ.ஆர்.ரகுமான் சகோதரி!

Bookmark and Share

பெயரை மாற்றிய ஏ.ஆர்.ரகுமான் சகோதரி!

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் ஆகிய திரையுலகிலும் முத்திரை பதித்து வரும் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி, ஏ.ஆர்.ரைஹானா தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும் இருக்கிறார்.

'மச்சி' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் இதுவரை பல படங்களுக்கு இசையைமத்திருந்தாலும் இதுவரை எந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை, பாடல்களும் அதிகம் பேசப்படவில்லை.

ஆனால், பின்னணிப் பாடகியாக சில ஹிட்டான பாடல்களைப் பாடியிருக்கிறார். இவர் தற்போது பிரபல பின்னணிப் பாடகரும், நடிகை சங்கீதாவின் கணவர் கிரீஷ் நாயகனாக அறிமுகமாகும் 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில் தன்னுடைய பெயருடன் தன் அப்பாவின் பெயரான சேகர் என்பதையும் சேர்த்து 'ரைஹானா சேகர்' என தன் பெயரை மாற்றியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான், ரைஹானாவின் அப்பா சேகர் பிரபலமான இசையைமப்பாளராக இருந்தவர்.

மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். ரைஹானா தன்னுடைய பெயருடன் அப்பா பெயரை சேர்த்து வைத்திருப்பதன் மூலம் 'புரியாத ஆனந்தத்தையும்', புதிதான ஆரம்பத்தையும் இந்தப் படம் வழங்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
என்னை கூண்டில் அடைக்க வேண்டாம் - விதார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions