‘பிச்சைக்காரன்’ தலைப்பை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்: முருகதாஸ் பேச்சு

Bookmark and Share

‘பிச்சைக்காரன்’ தலைப்பை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்: முருகதாஸ் பேச்சு

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாத்னா டைட்டஸ் நடித்துள்ளார். சசி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. 

இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் முருகதாஸ், ஸ்டான்லி, பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், எஸ்.ஆர்.பிரபாகரன், சக்திவேல் பெருமாள்சாமி, நடிகர்கள் விதார்த், அசோக், தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில் முருகதாஸ் பேசும்போது, ஒருமுறை நான் ஸ்டான்லி உள்ளிட்ட நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, சசியை பற்றி கேட்டேன். அப்போது, ஸ்டான்லி, சசி இப்போது விஜய் ஆண்டனியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்று கூறினார். 

தலைப்பு என்ன என்று கேட்டபோது, அவர் தெரியவில்லை என்று சொன்னார். பிறகு சிறிது நேரம் கழித்து எனது காதில் சசி படத்தின் தலைப்பு ‘பிச்சைக்காரன்’  என்று மெதுவாக சொன்னார். உடனே, நானும் அவருடைய காதில் ‘உடனடியாக இந்த தலைப்பை மாற்றச் சொல்லுங்கள்’ என்று மெதுவாக சொன்னேன். 

அதன்பிறகு, ஒரு நிகழ்ச்சியில் சசியை சந்திக்க நேர்ந்தது. அப்போது சசி என்னிடம் ஓடிவந்து எப்படியாவது தலைப்பை மாற்றிவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார். பிறகு, படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளிவந்தபோது, அதே தலைப்பை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

என்னடா, இது நாம் தலைப்பை மாற்ற சொன்னோம். ஆனால், இன்னும் மாற்றவில்லையே என்று வருத்தப்பட்டேன். 

ஆனால், இப்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை கேட்கும்போது, இந்த தலைப்பு இப்படத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறது என்று யோசிக்கத் தோன்றுகிறது.

எப்போதும் ஒரு படத்தோட தலைப்பை வைத்து அந்த படத்தை குறை சொல்லிவிட முடியாது. தலைப்பு என்பது ஒரு படத்திற்கு குறியீடு மட்டுமே என்று பேசினார்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions