உண்மை சம்பவங்களை மையப்படுத்தி உருவாகும் அராத்து

Bookmark and Share

உண்மை சம்பவங்களை மையப்படுத்தி உருவாகும் அராத்து

‘ப்ரியமுடன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’ ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா தனது பெயரை தற்போது ப்ரியமுடன் ஷெல்வா என மாற்றியுள்ளார்.

பல வெற்றி படங்களை தந்துள்ள ப்ரியமுடன் ஷெல்வா தனது அடுத்த படமான ‘அராத்து’ திரைப்படத்தின் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து ப்ரியமுடன் ஷெல்வா கூறும்போது,

“உண்மை சம்பவங்களின் அடிப்படையில் வடசென்னையை களமாகக் கொண்டது இப்படம். கதையின் யதார்த்தம் குறையாமல் எடுக்க திட்டமிட்டுள்ளோம். அழகிய காதலையும், முரட்டு தனத்தையும் முறையே சரிசமமாக கொண்டதுதான் ‘அராத்து’.

படத்திற்கு புத்துணர்வு தரும் வகையில் விஜய் கார்த்திக், சம்பி ஆகிய புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளோம். ‘டங்கா மாரி’ புகழ் விஜி இரண்டு பாடல்களை எழுதி பாடுகிறார். ‘அராத்து’ கதைக்கான வடசென்னையை நாங்களே வடிவமைத்து செட் அமைத்துள்ளோம். இது கதைக்கு மேலும் வலு சேர்க்கும்.” என்றார். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions