சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்

Bookmark and Share

சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அறம் செய்து பழகு’.‘அன்னை பிலிம் பேக்டரி’ நிறுவனம் சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதில் சந்தீப் கிஷன் ஜோடியாக ‘கிருஷ்ணகாடி வீர பிரேமா காதா’ என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதுகுறித்த தகவலை சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது,"இன்றுடன் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி"என்று பதிவு செய்திருந்தார். 


Post your comment





Related News
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
அரசியலில் களமிறங்கும் நயன்தாரா?
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!
ரசிகர்களை உற்சாகப்படுத்திய நயன்தாரா
தட்டி தூக்கிய கபிலன் வைரமுத்துவிற்கு முருகன் மந்திரம் பாராட்டு
என்னை அடுத்த கட்டத்திற்கு நயன்தாரா அழைத்து செல்வார்: இயக்குனர் கோபி நயினார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions