ஹீரோ மீது பழி போட்ட டைரக்டர்

Bookmark and Share

ஹீரோ மீது பழி போட்ட டைரக்டர்

மோகன்லால், ஜீவா நடித்த ‘அரண்'  படத்தை இயக்கியவர் மேஜர் ரவி. அடுத்து மோகன்லால், அமிதாப்பச்சன், கணேஷ் வெங்கட்ராமன் நடித்த ‘காந்தகார்‘ படம் இயக்கினார். 2010ம் ஆண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

தற்போது பிருத்விராஜ் நடிக்கும் ‘பிக்கெட் 43‘ படம் இயக்கி வெளியிட்டுள்ளார்.அமிதாப்பச்சன், மோகன்லாலை வைத்து இயக்கிய படத்தில் அவர்களை மேஜர் ரவி சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போதும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இதுபற்றி இயக்குனர் ரவியிடம் கேட்டபோது பட ஹீரோ கணேஷ் வெங்கட்ராமன் மீது பழி சுமத்தினார். அவர் கூறும்போது, ‘அமிதாப், மோகன்லால் பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை.

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் கணேஷ்  வெங்கட்ராமனை நான் தேர்வு செய்திருக்கக்கூடாது.  அவருக்கு பதிலாக பிரபலமான மற்றொரு நடிகரை அந்த கதாபாத்திரத்துக்கு நான் தேர்வு செய்திருக்க வேண்டும்.

அது என்னுடைய தவறுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்‘ என்றார். டைரக்டரின் இந்த கருத்தை அறிந்து கணேஷ் வெங்கட்ராமன் அதிர்ச்சி அடைந்தாராம். 


Post your comment





Related News
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions