அரண்மனை 2, அரண்மனையின் தொடர்ச்சி அல்ல!

Bookmark and Share

அரண்மனை 2, அரண்மனையின் தொடர்ச்சி அல்ல!

கடந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான பேய் படமான அரண்மனை பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் சுந்தர்.சி, சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா, நடிக்த்துள்ளனர். ஹிப் ஆப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார், யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஜனவரி 29ந் தேதி வெளிவருகிறது. 

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அரண்மனை 2 வை வெளியிடுகிறது. இது அரண்மனை படக் கதையின் தொடர்ச்சிதான் என்றும் லட்சுமிராய் கேரக்டருக்கு பதில் த்ரிஷா நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது அரண்மனை படத்தின் தொடர்ச்சி அல்ல இது வேறு கதை என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.

அதில் நடித்த பலர் இதில் நடிக்கிறார்கள், அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் இதிலும் பணியாற்றகிறார்கள் அவ்வளவுதான். எனவே இது அரண்மனையின் தொடர்ச்சி அல்ல என்று உறுதியாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions