தள்ளிபோனது அரண்மனை-2 ரிலீஸ் தேதி!

Bookmark and Share

தள்ளிபோனது அரண்மனை-2 ரிலீஸ் தேதி!

சுந்தர் சி படம் என்றால் காமெடிக்கு உத்திரவாதம் என்ற இமேஜ் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதற்கு மாறாக முதல்முறையாக அவர் இயக்கிய பேய்ப்படம் அரண்மனை.  

வினய், ஆன்ட்ரியா, ஹன்சிகா, சந்தானம் ஆகியோர் நடித்த இப்படம் வெறும் பேய்ப்படமாக இல்லாமல் தன்னுடைய பாணியில் காமெடிப்படமாகவும் தந்திருந்தார் சுந்தர்.சி. அரண்மனை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கியுள்ளார்.

இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

இப்படத்தை வாங்கி வெளியிடும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இன்னொரு ரிலீஸான கதகளியும் இதே பொங்கலன்று வெளியாகிறது.

ஒரே நிறுவனம் இரண்டு பெரிய படங்களை ஒரே நேரத்தில் எப்படி ரிலீஸ் செய்ய முடியும். இந்நிலையில் தற்போது அரண்மனை 2 படம் பொங்கலுக்கு ரிலீஸாகவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இப்படம் ஜனவரி 29ஆம் தேதி படம் வெளியாகும் என அரண்மனை 2 படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions