தள்ளி வைக்கப்பட்ட அரண்மனை -2 படம்?

Bookmark and Share

தள்ளி வைக்கப்பட்ட அரண்மனை -2 படம்?

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-2 படத்தில் நடிக்க இருப்பதாக த்ரிஷா வாயைத் திறந்த நேரம்... அந்தப் படமே ஒத்தி வைக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது. வினய், சந்தானம், சுந்தர்.சி, ஆன்ட்ரியா, ஹன்சிகா, ராய் லக்ஷ்மி ஆகியோர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கிய 'அரண்மனை' படம் கடந்த வருடம் வெளிவந்தது.

இப்போது காஞ்சனா-2 ஓடுவதுபோல் அப்போது அரண்மனை படம் ஓடியது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகத்தையும் சுந்தர்.சி எடுக்கவிருக்கிறார் என அப்போதே செய்திகள் வெளிவந்தன.

ஆனால், ஆம்பள படத்தில் பிஸியானார் சுந்தர்.சி. தற்போது அரண்மனை-2  படத்திற்கான வேலைகள்  சூடுபிடிக்கத் தொடங்கின.

'அரண்மனை 2' விற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் பிஸியாக இருந்தார் சுந்தர்.சி. இந்நிலையில், 'அரண்மனை 2' படத்தில் தான் நாயகியாக நடிக்கவிருக்கும் செய்தியை ட்விட்டரில் நேற்று பகிர்ந்தார் த்ரிஷா.  

இப்படத்தில் நாயகனாக சித்தார்த் நடிக்கிறார் என்பதையும் சொன்ன த்ரிஷா, தெலுங்கில் வெளிவந்த 'நுவ்வோஸ்டனன்டே நேனோட்டன்டனா', மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' படத்தைத் தொடர்ந்து சித்தார்த் உடன் 'அரண்மனை 2' வில் 3வது முறையாக ஜோடி சேருவதாகவும் தெரிவித்தார்  த்ரிஷா.

இதற்கிடையில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு கிடைத்திருப்பதாகவும்... அதனால் அரண்மனை 2 படத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் அடிபடுகிறது.

 


Post your comment





Related News
கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி
இனி பேய் படங்களில் நடிப்பதில்லை – த்ரிஷா?
அரண்மனை 2 சென்னை வசூல் விவரம் வெளிவந்தது!
அரண்மனை 2 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்
அரண்மனை 3 கட்டாயம் வரும் – இயக்குனர் சுந்தர் சி!
2016-ம் ஆண்டின் முதல் பேய் ஹிட் அரண்மனை 2
அரண்மனை 2 படத்திற்கு யு சான்றிதழ்
தள்ளிபோனது அரண்மனை-2 ரிலீஸ் தேதி!
தீபாவளி ரேஸில் இணையும் 'அரண்மனை 2'
நீச்சல் என்பது எனக்கு ஆரோக்கியமான உடற்பயிற்சி : த்ரிஷா உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions