ஹன்சிகாவுக்கு அரண்மனை கொடுத்த நம்பிக்கை!

Bookmark and Share

ஹன்சிகாவுக்கு அரண்மனை கொடுத்த நம்பிக்கை!

ஹன்சிகாவின் கைவசம் அதிகப்படியான படங்கள் இருப்பது போன்றொரு மாயை இருந்தாலும், அதில் பல படங்கள் சின்ன படங்கள்தான். விஜய்யுடன் நடிக்கும் புலி மட்டும்தான் பெரிய படம்.

ஆனால் அந்த படத்திலும் முதல் ஹீரோயினி என்றால் அது ஸ்ருதிஹாசன். முன்பு வேலாயுதம் படத்தில் எப்படி ஜெனிலியா முக்கியத்துவம் வாய்ந்த வேடத்திலும், ஹன்சிகா விஜய்யின் முறைப்பெண்ணாகவும் நடித்தாரோ அதேபோல்தான்.

இப்போது புலியில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் ஹன்சிகா. இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கும் அரண்மனை-2 படத்திலும் தற்போது நடிக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார் ஹன்சிகா.

ஆனால் சித்தார்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதனால் அவர்தான் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினியாம்.

இருப்பினும், அரண்மனை படத்தில் தன்னை லீடு ரோலில் நடிக்க வைத்தார் சுந்தர்.சி. அந்த படமும் மெகா ஹிட்டானது. அதனால் அந்த சென்டிமென்ட்டுக்காகவாவது தனக்கு நல்ல வேடம் கொடுப்பார் என்று நம்பிக்கையில்தான் அப்படத்தில் கமிட்டாகியிருக்கிறாராம் ஹன்சிகா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions