அரவிந்த்சாமியின் வித்தியாசம் மற்றும் விவேகம்

Bookmark and Share

அரவிந்த்சாமியின் வித்தியாசம் மற்றும் விவேகம்

இன்றளவும் நிஜ வாழ்க்கையில் கூட அரவிந்த்சாமியின் அழகைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுபவர்கள் அதிகம்தான். 24 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினிகாந்த் தம்பியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின் அவர் நாயகனாக நடித்த ரோஜா, மறுபடியும் ஆகிய படங்கள் வெற்றி பெற்று அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தன. இளம் பெண்களின் மத்தியில் அப்போது தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

தொடர்ந்து சில தோல்விப் படங்களில் நடித்தாலும் 1997ல் வெளிவந்த மின்சார கனவு அவருக்கு மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைத் தந்தது.

அதன் பின் 2000மாவது ஆண்டில் வெளிவந்த அலைபாயுதே படத்திற்குப் பிறகு அரவிந்த்சாமி திரையுலகத்தை விட்டு விலகிவிட்டார். இடையில் எப்போதோ முடிந்த சாசனம் படம் மட்டும் வெளிவந்தது.அதன் பின் அவரை பல வருடங்களாக கோலிவுட் பக்கம் கூடப் பார்க்க முடியவில்லை.

சில வருடங்களுக்கு முன்தான் மீண்டும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். அப்போது அவரைப் பார்த்தவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். மிகவும் குண்டாகி, தலையில் வழுக்கை விழுந்து ஆளே மாறிப் போயிருந்தார். மீண்டும் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அந்தப் படத்தில் கூட கொஞ்சம் குண்டாகத்தான் தெரிந்தார்.

ஆனால், இப்போது வெளிவந்துள்ள தனி ஒருவன் படத்தில் சரியான தோற்றத்துடன் மீண்டும் ஒரு ஹீரோவுக்குரிய அழகுடன் ரீ-என்ட்ரியாகிஅசத்தியிருக்கிறார். “தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லனா ?”,  என படம் ஆரம்பமாகும் போது ஆச்சரியப்பட்டவர்கள்தான் அதிகம்.

ஆனால், படத்தைப் பார்த்தவர்கள் அந்த சித்தார்த் அபிமன்யு கேரக்டரில் அரவிந்த்சாமியைத் தவிர வேறு யாரும் சிறப்பாக நடித்திருக்க மாட்டார்கள் என விமர்சித்து வருகிறார்கள். அரவிந்த்சாமியின் இந்த வில்லன் என்ட்ரி நிச்சயம் வித்தியாசமானது மட்டுமல்ல விவேகமானதும் கூட.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions