என்னை விட்டு விடுங்கள்: அரவிந்த்சாமியின் திடீர் முடிவு!

Bookmark and Share

என்னை விட்டு விடுங்கள்: அரவிந்த்சாமியின் திடீர் முடிவு!

ரோஜா படத்தில் நடித்திருந்தபோது அரவிந்த்சாமியை ஒருமுறையேனும் காண வேண்டும் என ஏராளமான கல்லூரி மாணவிகள் அவரை காண படையெடுத்தனர். தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகைகளை வைத்திருந்த முதல் நடிகர் அரவிந்த்சாமி தான். அந்த அளவுக்கு பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்தார்.

மேலும், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தவர், திடீரென்று பிஸ்னஸில் கவனம் செலுத்த சென்று விட்டதால், பின்னர் அவரது இடம் காலியாகி விட்டது.

பின் அவரை தளபதி படத்தில் அறிமுகம் செய்த மணிரத்னமே, தான் இயக்கிய கடல் படத்தில் அரவிந்த்சாமியை ஒரு பாதிரியார் வேடத்தில் நடிக்க வைத்து ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதையடுத்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்தில் நெகடீவ் ஹீரோ நடித்தார் அரவிந்த்சாமி.

பாசிட்டீவ் வேடங்களில் அரவிந்த்சாமியை பார்த்து ரசித்த ரசிகர்கள், இந்த நெகடீவ் வேடத்திலும் ரசித்தனர். எனவே அடுத்து வில்லனாகவும் அவர் ஒரு பெரிய ரவுண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் பிஸ்னஸ் பக்கம் திரும்பிவிட்டர் அரவிந்த்சாமி.

அதோடு, தன்னை மீண்டும் நடிக்க அழைக்கும் டைரக்டர்களிடம், வில்லனாக நடிக்க ஆசையில்லை. வித்தியாசமான பாசிட்டீவ் வேடங்கள் இருந்தால், அதுவும் எனக்கு பிடித்திருந்தால் நடிப்பேன். இல்லையேல் என்னை விட்டு விடுங்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறுகிறாராம் அரவிந்த்சாமி.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions