முதன் முறையாக சினிமாவில் நடிக்கும் அர்ச்சனா !

Bookmark and Share

முதன் முறையாக சினிமாவில் நடிக்கும் அர்ச்சனா !

சின்னத்திரையுலகின் நட்சத்திர தொகுப்பாளினி அர்ச்சனா சிறிய இடைவெளிக்கு பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி என்ற நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

முதன் முறையாக சினிமாவில் ஆர்.கே தயாரித்து நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் அர்ச்சனா நடிக்கிறார்.

இதுகுறித்து அவர் "சின்னத்திரை தொகுப்பாளியாக நான் பிசியாக இருந்த நேரத்திலும் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தது. அப்போது சினிமாவில் நடிக்க பயமாக இருந்தது. அதற்கான தகுதி எனக்கு இல்லை என்று நினைத்தேன். இப்போது அதற்கான பக்குவம் வந்திருப்பதாக நினைக்கிறேன்.

அதனால் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். படத்தில் இனியாவின் அக்காவாக முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். தொடர்ந்து கதைக்கும், நடிப்புக்கும் முக்கியத்தும் உள்ள கேரக்டர் அமைந்தால் நடிப்பேன்.

மற்றபடி முதலிடம் எப்போதும் சின்னத்திரைக்குத்தான். இப்போது நான் நடத்தும் அதிர்ஷ்டலட்சுமி நிகழ்ச்சி குடும்ப பெண்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி.

பல திறமைகளை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பெண்களை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மிகுந்த மன நிறைவோடு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்" என்கிறார் அர்ச்சனா.


Post your comment





Related News
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
தொகுப்பாளி அர்ச்சனா வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
சர்வதேச மகளிர் தின விழா: பெண்களுக்கு நடிகை அர்ச்சனா பரிசு வழங்கினார்
நடிகை அர்ச்சனா கவி காதல் திருமணம்: மலையாள காமெடி நடிகரை மணக்கிறார்
கிளாமர் கோதாவில் இறங்கிய அர்ச்சனா!
பஞ்சமி திருப்புமுனையை ஏற்படுத்திய படம் - அர்ச்சனா!
அர்ச்சனாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்
நிர்வாண போட்டோ சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகை..!
அஜய் – அர்ச்சனாவின் மதுரை மாவேந்தர்கள்!
நடிகை தற்கொலை - காதல் தோல்வியா...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions