அர்ச்சனாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்

Bookmark and Share

அர்ச்சனாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்

அழகு, திறமை இருந்தும் சினிமாவுக்கு வர மாட்டேன் என்று அடம்பிடித்த சின்னத்திரை தொகுப்பாளர்களில் அர்ச்சனாவும் ஒருவர். இளமை புதுமை, நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர்.

பல பெரிய நட்சத்திர கலைவிழாக்களில் தொகுப்பாளராக இருந்தவர். பல இயக்குனர்கள் சினிமா வாய்ப்போடு அர்ச்சனாவை அணுகியும் சினிமா வாய்ப்புகளை தவிர்த்தவர். இப்போது ஆர்.கே, சிருஷ்டி டாங்கே நடிப்பில் மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்கிறார்.

ஷாஜி கைலாஷ் இயக்கிய என் வழி தனி வழி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை அர்ச்சனா தொகுத்து வழங்கினார். அப்போது ஷாஜி அர்ச்சனாவிடம் "உங்களுக்கு அருமையான கேரக்டர் ஒன்று இருக்கிறது நடியுங்கள்" என்று கூற பெரிய இயக்குனர் அழைக்கும்போது அதை மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டு நடித்து வருகிறார்.

வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் ஹீரோயின்களில் ஒருவரான இனியாவின் அக்காவாக நடிக்கிறார். ஆம்பூரில் பிரியாணி கடை நடத்தும் அட்ராசிட்டி பெண்ணாக நடிக்கிறார். நல்ல வாய்ப்புகள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.


Post your comment





Related News
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
தொகுப்பாளி அர்ச்சனா வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
சர்வதேச மகளிர் தின விழா: பெண்களுக்கு நடிகை அர்ச்சனா பரிசு வழங்கினார்
முதன் முறையாக சினிமாவில் நடிக்கும் அர்ச்சனா !
நடிகை அர்ச்சனா கவி காதல் திருமணம்: மலையாள காமெடி நடிகரை மணக்கிறார்
கிளாமர் கோதாவில் இறங்கிய அர்ச்சனா!
பஞ்சமி திருப்புமுனையை ஏற்படுத்திய படம் - அர்ச்சனா!
நிர்வாண போட்டோ சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகை..!
அஜய் – அர்ச்சனாவின் மதுரை மாவேந்தர்கள்!
நடிகை தற்கொலை - காதல் தோல்வியா...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions