நிர்வாண போட்டோ சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகை..!

Bookmark and Share

நிர்வாண போட்டோ சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகை..!

இணையதளங்களில் நடிகைகளின் முகங்களை வைத்து மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள், நடிகைகளின் பெயரில் அவர்களது சாயலில் உள்ள பெண்களின் நிர்வாண வீடியோக்களை சில விஷமிகள் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது தொடர்கதையாகத்தான் இருக்கிறது..

முதலில் இணையதளங்களில் ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டிருக்கும்போது ஏதேச்சையாக தட்டுப்பட்ட இப்படிப்பட்ட புகைப்படங்களோ, வீடியோக்களா டெக்னாலஜி வளரவளர இப்போது வாட்ஸ்அப் மூலமாக நேரடியாகவே செல்போனுக்கு வர ஆரம்பித்துவிட்டன.

சமீபத்தில் ஹன்சிகாவின் குளியல் வீடியோ என சொல்லி ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மலையாள நடிகையான ரக்சனா நாராயணன்குட்டி என்பவரின் ஆபாச புகைப்படம் வெளியாகி அவருக்கு மட்டுமல்ல, கேரள திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து ரக்சனாவிடம் போன்போட்டு பலரும் அதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அவர் உடனே தனது பேஸ்புக் பக்கத்தில், “இது நான் மட்டுமல்ல, சமூகத்தில் உள்ள என்னைபோன்ற பல பெண்களும் எதிர்கொண்டுள்ள அவலம் தான்.. தங்களது குடும்பத்தை சேர்ந்த பெண்களையே மதிக்காத இதுபோன்ற நபர்கள், எப்படி அடுத்த வீட்டு பெண்களை மதிப்பார்கள்” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மலையாளத்தில் 'ஆமென்', 'புண்யாலன் அகர்பத்திஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ள ரக்சனா, தற்போது பிருத்விராஜ், ஆர்யா நடிக்கும் டபுள் பேரல் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


Post your comment





Related News
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
தொகுப்பாளி அர்ச்சனா வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
சர்வதேச மகளிர் தின விழா: பெண்களுக்கு நடிகை அர்ச்சனா பரிசு வழங்கினார்
முதன் முறையாக சினிமாவில் நடிக்கும் அர்ச்சனா !
நடிகை அர்ச்சனா கவி காதல் திருமணம்: மலையாள காமெடி நடிகரை மணக்கிறார்
கிளாமர் கோதாவில் இறங்கிய அர்ச்சனா!
பஞ்சமி திருப்புமுனையை ஏற்படுத்திய படம் - அர்ச்சனா!
அர்ச்சனாவும் சினிமாவுக்கு வந்து விட்டார்
அஜய் – அர்ச்சனாவின் மதுரை மாவேந்தர்கள்!
நடிகை தற்கொலை - காதல் தோல்வியா...?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions