இறுதிகட்ட படப்பிடிப்பில் தெலுங்கு அரிமா நம்பி

Bookmark and Share

இறுதிகட்ட படப்பிடிப்பில் தெலுங்கு அரிமா நம்பி

தமிழ் திரையில் கும்கி நாயகன் விக்ரம் பிரபு மற்றும் நடிகை ப்ரியா ஆனந்த் நடிப்பில் திரைக்கு வந்த படம் அரிமா நம்பி. எதிர்பார்த்த அளவு இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும், இப்படம் பேசும் படி வரவேற்பை பெற்றது.

இப்படம் தெலுங்கு திரையில் டைனமைட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. தெலுங்கு திரையின் இளம் நாயகன மஞ்சு விஷ்ணு இப்படத்தின் நாயகனாக நடித்து வருகின்றார்.

இயக்குநர் தேவா கட்டா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மஞ்சு விஷ்ணுவிற்கு ஜோடியாக சகுனி நாயகி பிரணித்தா நடித்து வருகின்றார். 24 பரமேஸ் பேக்டரி நிறுவனத்தின் கீழ் நடிகர் மஞ்சு விஷ்ணு தயாரிக்கும் இப்படத்திற்காக அவர் தாய்லாந்து நட்டிற்குச் சென்று சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டாராம்.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கும் இப்படத்தின்  படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாம். இப்படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டும் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions