
மலையாளத்தில் த்ரிஷயம் படத்தை (பாபாநாசம்) இயக்கிய ஜீத்து ஜோசப்பின் மற்றுமொரு வெற்றிப்படம் மெமரீஸ். இதுவும் பாபநாசம் போன்று சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்தான்.
இந்தப் படத்தை தமிழில் ஆறாது சினம் என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். பிருத்விராஜ் நடித்த கேரக்டரில் அருள்நிதி நடித்திருகிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார்.
மெமரீஸ் படத்தை அப்படியே ரீமேக் செய்யவில்லை நிறைய மாற்றி இருக்கிறேன். என்கிறார் அறிவழகன், அவர் மேலும் கூறியதாவது: ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது 100 சதவிகிதம் அப்படியே செய்ய வேண்டும் என்பதில்லை.
ரீமேக் செய்யும் இயக்குனரின் கிரியேட்டிவை அதில் வைக்கலாம். மெமரீஸ் படத்தின் ஒன்லைனையும், அதன் திரைக்கதை வடிவத்தையும் அப்படியே எடுத்துக் கொண்டு அதில் புதிய பயணம் செய்திருக்கிறேன்.
50 சதவிகிதம் வரை மாற்றம் செய்திருக்கிறேன் என்று கூறலாம்.மலையாள படம் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு மென்மையான போக்கு இருக்கும், பொயட்டிக்காக தன்மை இருக்கும். அதனால்தான் க்ரைம் படமாக இருந்தாலும் டைட்டிலை மெமரீஸ் என கவித்துவமாக வைத்திருக்கிறார்கள்.
தமிழ் ஆடியன்சுக்கு கதை ராக்கெட் வேகத்தில் பறக்க வேண்டும். டைட்டிலிலும் அனல் பறக்க வேண்டும். அதனால்தான் ஆறாது சினிம் என்று டைட்டில் வைத்திருக்கிறேன். மலையாளத்தில் நிறைய கிறிஸ்தவ கேரக்டர்கள் வரும். ஹீரோ, ஹீரோயினுமே கிறஸ்தவர்கள்தான்.
ஆனால் தமிழ் படத்தில் அப்படி வைக்க முடியாது என்பதால் பெரும்பலான கேரக்டர்களை இந்து கேரக்டராக மாற்றி இருக்கிறேன். இப்படி பல மாற்றங்கள் இருக்கும்.
ஆனாலும் கதையின் கருவில், ஓட்டத்தில் ஜீத்து ஜோசப்பின் கைவண்ணம் இருக்கும் என்கிறார்.படத்தை வருகிற 26ந் தேதி வெளியிடப்போவதாக தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.
Post your comment
Related News | |
![]() |