நெருப்புடா பாடகரின் அடுத்த பாடல் இதுதான்!

Bookmark and Share

நெருப்புடா பாடகரின் அடுத்த பாடல் இதுதான்!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் தமிழ், கன்னட இருமொழி திரைப்படம் ‘நிபுணன்’ மற்றம் ‘விஸ்மயா’. அர்ஜுனோடு இணைந்து சக அதிகாரிகளாக கைகோர்த்துள்ளனர் பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார். ‘லூசியா’ என்ற கன்னட வெற்றிப் படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார்.

சுமன், சுஹாசினி மணிரத்னம் வைபவ் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். தமிழில் ‘நிபுணன்’, கன்னடத்தில் ‘விஸ்மயா’ என்ற தலைப்புகளில் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த இருமொழி திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு மற்றும் தமிழகத்தில் நடைபெற்றது.

அமெரிக்கா வாழ் தமிழர் அருண் வைத்யநாதன் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாழி (மலையாளம்) படங்களை இயக்கியவர். நிபுணன் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்து குரல் பதிவு, இசைக்கோர்வை மற்றும் அனைத்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், இதன் கதையைக்கேட்டு உற்சாகமடைந்த ஒரு பிரபலம் தற்போது நிபுணன் குழுவில் இணைந்திருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல, சமீபத்தில் உலகம் முழுக்க பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’ திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான ‘நெருப்புடா’ பாடலுக்கு சொந்தக்காரர் அருண்ராஜ்’. ‘நெருப்புடா’ பாடலுக்கு இணையாக நிபுணன்
பாடலும் இருக்கும் என்கிறார் அருண்ராஜ்.

நிபுணன் படத்தினை பேஷன் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம், உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் மற்றும் அருண் வைத்யநாதன் தயாரிக்க, ஒளிப்பதிவு செய்கிறார் அர்விந்த் கிருஷ்ணா. இசை : எஸ்.நவீன், படத்தொகுப்பு : சதீஷ் சூர்யா, ஆர்ட் : ஆறுசாமி, ஸ்டண்ட் : அன்பறிவ் மற்றும் சுதேஷ், மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா மற்றும் நிகில். வெகுவிரைவில் ‘நிபுணன்’ ரசிகர்களை குஷிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

 


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions