வில்லனாகும் அர்ஜூன்!

Bookmark and Share

வில்லனாகும் அர்ஜூன்!

அர்ஜூனை அரவணைத்தது என்னவோ தமிழ் சினிமாவாக இருந்தாலும், அவர் தனது தாய்மொழியான கன்னடத்திலும் அவ்வப்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டுதான் வந்துள்ளார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு அட்டகாசா, அபிமன்யூ ஆகிய படங்களில் நடித்தவர்,  இப்போது கேம் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், தமிழில் ஜெய்ஹிந்த்-2 படத்தை இயக்கி நடித்த அர்ஜூன், அடுத்தும் ஒரு படத்தை இயக்கி நடிக்கயிருப்பதாக கூறி வருகிறார்.

இந்தநிலையில், தற்போது ஏஎம்ஆர்.ரமேஷ் இயக்கும் ஒரு மெல்லிய கோடு படத்தில் ஷாமுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தில் அர்ஜூனும் இன்னொரு ஹீரோ என்று சொல்லப்பட்டாலும், கதைப்படி அவருக்கு வில்லன் வேடமாம்.

முதலில் நெகட்டிவ் ரோலில் நடிக்க தயங்கினாராம் அர்ஜூன். ஆனால், வன யுத்தம் படத்தில் தன்னை ஏ.எம்.ஆர்.ரமேஷ் ஹீரோவாக நடிக்க வைத்தவர் என்பதால், அவரது வேண்டுகோளை நிராகரிக்க முடியாமல்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டாராம் அர்ஜூன். இருப்பினும் அவரது ஹீரோ இமேஜ்க்கு பங்கம் ஏற்படாத வகையில் வில்லன் வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions