தமிழ்ப்படங்களை கன்னடப்படமாக மாற்றும் அர்ஜுன்!

Bookmark and Share

தமிழ்ப்படங்களை கன்னடப்படமாக மாற்றும் அர்ஜுன்!

தமிழ்நாட்டு ரசிகர்கள் எல்லாம் நடிகர் அர்ஜுனை தமிழ் நடிகர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க, கர்நாடகாவைப் பொருத்தவரை இன்னும் அவர் கன்னடப்பட ஹீரோதான். காரணம்... அவ்வப்போது கன்னடப் படங்களில் நடித்து தன்னை கன்னடப்பட ஹீரோவாகவே அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்திக்கொண்டு வருகிறார்.

நேரடி கன்னடப்படங்களில் நடிப்பது மட்டுமல்ல, தான் நடிக்கும் தமிழ்ப் படங்களையும் கூட கன்னடத்தில் வெளியிடும் வகையில் செய்துவிடுகிறார்.சசிதரூர் மனைவியின் மர்ம மரணத்தைப் பற்றிய கதை அம்சம் கொண்ட ஒரு மெல்லிய கோடு படம் தமிழில் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. உண்மையில் இந்தப்படம் கன்னடத்திலேயே எடுக்கப்படுகிறது.

கன்னடத்திலும் இப்படம் வெளியிடப்பட உள்ளது. அதனாலேயே இப்படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பை பெங்களூருவில் நடத்தி உள்ளனர்.அருண் வைத்தியநாதன் என்பவர் தற்போது அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.

இந்தப் படத்தையும் கன்னடத்தில் வெளியிடும் திட்டத்தில் பெங்களூருவில் படப்பிடிப்பு நடத்தும்படி சொல்லிவிட்டாராம் அர்ஜுன். இப்படியாக தன்னைத் தேடி வரும் தமிழ்ப்படங்களை எல்லாம் கன்னடத்திலும் தனக்கு கொஞ்சம் மவுசு இருப்பதால் கன்னடப்படமாக மாற்றி வருகிறார் அர்ஜுன்.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions