இதை எல்லாம் பார்க்க எங்க அம்மா இல்லையே: வாரிசு நடிகர் கவலை

Bookmark and Share

இதை எல்லாம் பார்க்க எங்க அம்மா இல்லையே: வாரிசு நடிகர் கவலை

மும்பை: என் அம்மா விரும்பியது போன்று இன்று நான் ஒரு ஆளாகிவிட்டேன். எனக்கென வீடு வாசல் உள்ளது. அவர் நான் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அப்படி ஆகியுள்ளேன். ஆனால் இதை எல்லாம் பார்க்க என் அம்மா இல்லையே என்று நடிகர் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நிலையில் நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்தார். முதல் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு ஸ்ரீதேவியுடன் சென்றுவிட்டார்.

இந்நிலையில் இது குறித்து போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் கூறும்போது,ஸ்ரீதேவி என் அப்பாவின் மனைவி. அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றும் கிடையாது. அவரின் மகள்களான ஜான்வி, குஷி என் தங்கைகள் கிடையாது.ஜான்வி, குஷி ஆகியோரை நாங்கள் சந்தித்து பேசுவதே கிடையாது.

அதனால் எங்களுக்குள் அண்ணன், தங்கை என்ற உறவு எதுவும் இல்லை. அவர்கள் என் தந்தையின் மகள்கள்.எங்கள் தந்தை எங்களை விட்டுச் சென்ற பிறகு எனக்கும், என் தங்கை அன்ஷுலாவுக்கும் ஆதரவாக இருந்த அம்மாவும் இறந்துவிட்டார். என் தங்கை சிறுவயதில் பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டார்.

என் அம்மா விரும்பியது போன்று இன்று நான் ஒரு ஆளாகிவிட்டேன். எனக்கென வீடு வாசல் உள்ளது. அவர் நான் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அப்படி ஆகியுள்ளேன். ஆனால் இதை எல்லாம் பார்க்க என் அம்மா இல்லையே என்றார் அர்ஜுன்.


Post your comment





Related News
விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?
ஒரு வயது மகனுக்கு ரூ.1.30 கோடி காரை பரிசளித்த சயிப் அலிகான்
நாகார்ஜுனா ஸ்டுடியோவில் தீ விபத்து
‘பத்மாவதி’ படம் வெளியாக வாய்ப்பு தாருங்கள்: ஷாகித் கபூர்
என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்
படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை.!
அர்ஜுனுக்காக களமிறங்கிய ஏ.ஆர்முருகதாஸ்
இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் புதிய பட புகைப்படம் உள்ளே.!
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
அரைகுறை உடையில் நடிகை செய்த வேலை - வைரலாகும் புகைப்படம் உள்ளே !







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions