அர்ஜுன்-பிரசன்னாவுடன் இணைந்த வரலட்சுமி

Bookmark and Share

அர்ஜுன்-பிரசன்னாவுடன் இணைந்த வரலட்சுமி

சினேகா-பிரசன்னா நடிப்பில் வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இதைத் தொடர்ந்து பிரசன்னா நடிப்பில் வெளிவந்த ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தையும் இவர் இயக்கியிருந்தார்.

இவ்விரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காததால், மலையாள பக்கம் ஒதுங்கிய வைத்தியநாதன், மோகன்லால் நடிப்பில் ‘பெருச்சாழி’ என்ற படத்தை இயக்கி பெரிய வெற்றி கொடுத்தார்.

தற்போது இவரது பார்வை மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. அர்ஜூன், பிரசன்னாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகிறது.

எந்தவொரு விசாரணையையும் தனது புத்திசாலித்தனத்தால் எதிர்கொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை மையமாக வைத்து இப்படம் தயாராகவிருக்கிறது. தற்போது இப்படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் இணைந்துள்ளார். இந்த தகவலை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions