தாதா அருண் காவ்லியை சந்தித்த விவகாரம்: அர்ஜுன் ராம்பாலுக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ்

Bookmark and Share

தாதா அருண் காவ்லியை சந்தித்த விவகாரம்: அர்ஜுன் ராம்பாலுக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ்

கொலை வழக்கு ஒன்றில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த தாதா அருண் காவ்லி, வழக்கமான உடல் பரிசோதனைக்காக கடந்த டிசம்பர் 29-ந் தேதி மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த அவரை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் சந்தித்ததாக கூறப்படுகிறது.

காவ்லியின் வாழ்க்கையை மையமாக கொண்ட 'டாடி' என்ற படத்தில் நடித்து வரும் அர்ஜுன் ராம்பால், காவ்லியை மருத்துவமனையில் சந்தித்து அவரது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளை பற்றி கேட்டறிந்ததாக தெரிகிறது. எனினும் உரிய அனுமதியின்றி காவ்லியை ராம்பால் சந்தித்ததால், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசும் அனுப்பியுள்ளனர்.

காவ்லி சிறைக்குள் இருந்தாலும் வெளியுலகில் அவருக்கு பலத்த செல்வாக்கு உள்ளது. அவரிடம் முன் அனுமதி பெறாமல் இத்தகைய சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லை என்று காவல்துறையினர் கருதுகின்றனர். வழக்கமாக சிறைக்குள் உள்ள காவ்லியை யாராவது சந்திக்க விரும்பினால், சிறையினும் உள்ள சிறப்பு அறையில் வைத்து அவரை சந்திக்க அனுமதியளிக்கப்படும்.

இந்நிலையில் சிறைக்கு வெளியே, மருத்துவமனையில் வைத்து எதற்காக காவ்லியை ராம்பால் சந்தித்தார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் விசாரணையில் போலீசாருக்கு திருப்தி ஏற்பட்டால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று காவல்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions