அர்ஜுனுடன் இணைகிறார் ஷாம்

Bookmark and Share

அர்ஜுனுடன் இணைகிறார் ஷாம்

‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘வனயுத்தம்‘ படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ், அடுத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். கன்னடம், தமிழில் தயாராகும் இந்தப் படத்துக்கு கன்னடத்தில் ‘கேம்‘ என்று பெயர் வைத்துள்ளார். தமிழில் இன்னும் பெயர் வைக்கவில்லை.

இதில் அர்ஜுன், ஷாம் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின் முடிவாகவில்லை. முக்கியமான வேடத்தில் நடிக்க இந்தி நடிகை ஒருவரிடம் பேசிவருவதாக ஏ.எம்.ஆர்.ரமேஷ் சொன்னார்.

‘எப்போதும் உண்மை கதைகளைத்தான் எடுப்பேன். இதுவும் அப்படிப்பட்ட கதைதான். ஆனால் ஒரு தனிப்பட்ட மனிதரின் கதையாக இருக்காது. ஒரே ஒரு சம்பவத்தை பற்றிய கதையாகவும் இருக்காது.

திரைக்கதை யாரும் யூகிக்க முடியாததாக இருக்கும். அர்ஜுனும், ஷாமும் கன்னட திரையுலகுக்கும் அறிமுகமானவர்கள் என்பதால் இதை இரண்டு மொழிகளில் எடுக்கிறேன்’ என்றார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions