இப்போதும் சொல்கிறேன்... தேசிய விருதுகளில் நேர்மையில்லை! - ஏ ஆர் முருகதாஸ்

Bookmark and Share

இப்போதும் சொல்கிறேன்... தேசிய விருதுகளில் நேர்மையில்லை! - ஏ ஆர் முருகதாஸ்

தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் நேர்மை இல்லை.. பெரும் பாரபட்சம் இருந்தது என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை என்று இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் கூறியுள்ளார்.

2016-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முக்கிய விருதுகள் அனைத்தும் இந்திப் படங்களுக்கே வழங்கப்பட்டன. இந்த விருது வழங்குவதில் அரசியல் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் தனது அதிருப்தியை தெரிவித்தார். தேசிய விருதுகளுக்கான நபர்கள் ஒருதலைபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனால் சினிமா உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தேர்வு குழுவில் இருந்த பிரியதர்ஷன் விளக்கம் கூறியிருந்தார்.

இந்நிலையில், தேசிய விருதுகள் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் தன் கருத்தைக் கூறியுள்ளார்.

"தேசிய விருதுகள் குறித்து நான் கூறியது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து. வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்," என்று நெத்தியடியாகக் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஸ்பைடர் படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்
பிரபல இயக்குனர் மரணத்தால் தள்ளிப்போன மகேஷ் பாபுவின் Spyder பட டீஸர் வெளியீடு- இதோ புதிய தேதி
விஜய்க்கு துப்பாக்கி கிடைத்தது இப்படித்தான்
எச்சரிக்கை மனிதர்கள் நடமாடும் இடத்தை திறந்து வைத்த முருகதாஸ்,
அஜித் கால்ஷிட்டையே சூழ்ச்சியில் பெற்றவர் முருகதாஸ், அவருடைய சொந்த கதை ஏதுமில்லை- வெளுத்து வாங்கிய இயக்குனர்
சுரேஷ் காமாட்சியின் இயக்கும் "மிக மிக அவசரம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏஆர் முருகதாஸ்!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சாதனை!
ஏ.ஆர். முருகதாஸின் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தேசிய விருது தீர்ப்புக் குழுவிற்கு ஏ.ஆர். முருகதாஸ் பதிலடி
விஜய் - முருகதாஸ் படத்துக்கு மூன்று ஹீரோயின்கள்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions